Events
News & Events of Gokula Makkal Katchi....!!!
கட்சியின் அடிப்படைக் கொள்கைகள்
நீலம் :
வானுக்கும் கடலுக்கும் நீலநிறம். வானத்தைப் போல் பறந்து விரிந்த மனத்துடன் அனைத்து சமுதாயங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப் போராடுவோம், தியாகம் செய்வோம் என்ற நிலையிலும், பரந்து விரிந்த கடலினை வைத்துக் கொண்டு நீருக்கு காசு கொடுத்து வாங்கும் நிலையினை மாற்றிடவும், மீனவர் துயரம் துடைக்கவும், பாடுபடுவோம் என்ற நிலையிலும், நீலத்தை கொடியின் மேலான வண்ணமாக வைத்துள்ளோம்.
பச்சை :
நீரின்றி உலகில்லை, உணவின்றி உயிரில்லை. இயற்கை கொடுத்துள்ள பசுமையினைப் போற்றி விளைவித்து, பசியைப் போக்கும் விவசாயப் பெருமக்களுக்கு தேவையானவை கிடைக்கப் பாடுபட்டு, கால்நடை வளர்ப்பினை, பராமரிப்பினை மேம்படுத்த, பசுமைப் புரட்சியை உண்டாக்கி, நாடு வளம்பெற இயற்கை வளம் மென்மேலும் பெருக, அதை செயல்படுத்தும் விவசாயிகள் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற நிலையில் பச்சையினை இடையில் வண்ணமாக வைத்துள்ளோம்.
சிவப்பு :
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை என்றான் ஒரு கவிஞன். இதுவே புரட்சியின் ஆரம்பநிலை. இதனுள் நுழைந்து, அனைத்து மக்களின் அடிப்படை வாழ்வாதார நிலையினை மேம்படுத்த நடைபெறும் சமூக நீதி, சுயமரியாதைப் புரட்சியில் பங்கேற்று வெற்றிபெற பாடுபடுவோம் என்ற நிலையில் சிவப்பினை வண்ணமாக வைத்துள்ளோம்.
கட்சியின் அடிப்படைக் கொள்கைகள்
1. சமதர்ம சமுதாய மேம்பாட்டிற்கு பாடுபடுதல்
2. புகையிலை, போதைப் பழக்கத்தால் சீர்கெடும் மக்களை அதிலிருந்து விடுவிக்க பாடுபடுதல்
3. மண்ணின் மைந்தர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவைத்தல்
4. இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து நீர்வள ஆதாரத்தை பெருக்கி பசுமை புரட்சியை உருவாக்கவைத்தல்
5. சாதி, மத, கலவரங்களை தூண்டிவிட்டு மக்களை விரோதிகளாக்கும் தீய சக்திகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக போராடுதல்
6. விவசாயிகளுக்கு சலுகைவிலையில் தரமான விதை, உரம், பூச்சிமருந்து வழங்க, விவசாயத்தை மேம்படுத்த பாடுபடுதல்
7. தமிழ்நாட்டில் மணல் கொள்ளையை தடுத்து நீர் ஆதாரத்தை பெருக்கவும், மக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்க பாடுபடுதல்.
8. பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், பால் உற்பத்தியை பெருக்குவதற்கும் பாடுபடுதல்.
9. கல்வியும், மருத்துவமும், இலவசமாக மக்களுக்கு கிடைக்க பாடுபடுதல்
10. நாட்டில் தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க பாடுபடுதல்
11. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு, விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க பாடுபடுதல்
12. கால்நடை (ஆடு, மாடு) வளர்க்கும் விவசாயிகளின் இன்னலைப் போக்கும் வகையில் மேய்ச்சல்கால் புறம்போக்கு நிலங்களை மீட்டு அவர்கள் வாழ வழிவகை செய்துதர பாடுபடுதல்.
13. கிராமத்து மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திதர பாடுபடுதல்
14. சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, விகிதாசார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க பாடுபடுதல்