About Us
About Gokula Makkal Katchi
1989 முதல் பொது வாழ்க்கைக்கு அடியடுத்து வைத்து தமிழ்நாடு யாதவமகாசபையின் வாயிலாக தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கிறார். திருவாளர் இலட்சுமணப்பிள்ளை தலைமையில் உறுப்பினராக இருந்து பிறகு மதுரை பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வி.கலைமணி அவர்கள் தலைமையில் பல்வேறு பொறுப்பிலும் அதை தொடர்ந்து மனிதநேய மாமனிதர் டாக்டர் மா. கோபலாகிருஷ்ணன் அவர்கள் தலைமைபொறுப்பேற்றிய பிறகும் தொடர்ந்து நமது யாதவம் ஆசிரியர் குழுவிலும், மாநில செயாற்குழுவிலும், மாநில உயர்நிலைக் குழுவிலும், மாநில பொதுக்குழுவிலும், மாநில இளைஞர் அணி செயலாளராக பல்வேறு பொறுப்புகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
1995-ல் இந்தியாவின் இரும்பு மனிதர் நேத்தாஜி முலாயம் சிங் யாதவ் அவர்கள் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் திருவாளர் கோவில்பட்டி கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலும், அதை தொடர்ந்து மருதுபாண்டியர் அவர்கள் தலைமையிலும் சமாஜ்வாதி கட்சியில் தலைமை நிலைய செயலாளராகவும் பணியாற்றினார். 1995-ல் உத்திரபிரேதசத்தில் சமாஜ்வாதி கட்சியின் மாநாட்டிற்கு ஓரு தொடர்வண்டியை பதிவு செய்து 85 நபர்கள் சென்று சிறப்பு செய்து வந்தார்கள். அதன்பிறகு 1997ல் தமிழகத்தில் பேராசிரியர் வி.கலைமணி, டாக்டர் ம.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை பொறுப்பு ஏற்றபோது மத்திய சென்னை மாவட்ட செயளாராக பணியாற்றியுள்ளார்.
1999ல் தமிழ் பெயரில் அரசியல் கட்சி இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற கூற்றிற்கு ஏற்ப, மதிப்பிற்குரிய முன்னாள் அமைச்சர் திரு ச.கண்ணப்பன் அவர்கள் தலைமையில் மக்கள் தமிழ் தேசம் எனும் அரசியல் கட்சியை டில்லி சென்று பதிவு செய்தார். அந்த கட்சியில் மத்திய சென்னை மாவட்ட செயலாளராக தெடர்ந்து பணியாற்றினார். பிறகு டாக்டர் ம.கோபாலகிருஷ்ணன் கூறியதர்க்கு இணங்க தொடர்ந்து அவரோடு கை கோர்த்து இன்று வரை சமுதாய பணி செய்து கொண்டு இருக்கிறார்.
திருவாளர் டி.நாகேந்திரன் அகில இந்திய தலைவர் பொறுப்பேற்;ற போது டில்லி சென்று அனைத்திந்திய யாதவர்களின் மாநாட்டிற்கும், கிருஷ்ணபவனம் திறப்பு விழாவிலும,; உயர்நிலை உறுப்பினராக பதிவு செய்து தொடர்ந்து பணியாற்றி கொண்டு இருக்கிறார். சமுதாய தலைவர்களான டி.நகோந்திரன், பேராசிரியர் வி.கலைமணி, புலவர் புகழேந்தி, அம்பத்தூர் கேசவன், திருவொற்றியூர் சந்திரன், பேராசிரியர் ஜி. அரங்கநாதன், கோவில்பட்டி கோபாலகிருஷ்ணன், தஞ்சை டி.கே. கோவிந்தன் போன்ற சமுதாய பெருந்தலைவர்களுடன் பணியாற்றினார்.
2004ல் தமிழ்நாடு யாதவமகாசபை மாநில இளைஞர் அணி செயலாளர் பொறுப்பேற்று இன்றுவரை தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கிறார். 2006-ல் சமாஜ்வாதி கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவராகவும் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நின்று அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இப்போது 2014 பிப்ரவரி 21ல் தமிழகத்தில் வாழ்கின்ற அனைத்து சமுதாயப் பெருந்தலைவர்களை அழைத்து சாதிபாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றும் இல்லாமையை இந்நாட்டைவிட்டே அகற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு கோகுல மக்கள் கட்சியினைத் தொடங்கி வெகு சிறப்பாக மக்கள் பணியாற்றி கொண்டிருக்கிறார்.