Of the People, For the People, By the People

WELCOME to GOKULA MAKKAL KATCHI
1989 முதல் பொது வாழ்க்கைக்கு அடியடுத்து வைத்து தமிழ்நாடு யாதவமகாசபையின் வாயிலாக தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கிறார். திருவாளர் இலட்சுமணப்பிள்ளை தலைமையில் உறுப்பினராக இருந்து பிறகு மதுரை பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வி.கலைமணி அவர்கள் தலைமையில் பல்வேறு பொறுப்பிலும் அதை தொடர்ந்து மனிதநேய மாமனிதர் டாக்டர் மா. கோபலாகிருஷ்ணன் அவர்கள் தலைமைபொறுப்பேற்றிய பிறகும் தொடர்ந்து நமது யாதவம் ஆசிரியர் குழுவிலும், மாநில செயாற்குழுவிலும், மாநில உயர்நிலைக் குழுவிலும், மாநில பொதுக்குழுவிலும், மாநில இளைஞர் அணி செயலாளராக பல்வேறு பொறுப்புகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
Peace, Prosperity & Progress
1995-ல் இந்தியாவின் இரும்பு மனிதர் நேத்தாஜி முலாயம் சிங் யாதவ் அவர்கள் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் திருவாளர் கோவில்பட்டி கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலும், அதை தொடர்ந்து மருதுபாண்டியர் அவர்கள் தலைமையிலும் சமாஜ்வாதி கட்சியில் தலைமை நிலைய செயலாளராகவும் பணியாற்றினார். 1995-ல் உத்திரபிரேதசத்தில் சமாஜ்வாதி கட்சியின் மாநாட்டிற்கு ஓரு தொடர்வண்டியை பதிவு செய்து 85 நபர்கள் சென்று சிறப்பு செய்து வந்தார்கள். அதன்பிறகு 1997ல் தமிழகத்தில் பேராசிரியர் வி.கலைமணி, டாக்டர் ம.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை பொறுப்பு ஏற்றபோது மத்திய சென்னை மாவட்ட செயளாராக பணியாற்றியுள்ளார்.